ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

அர்ஜுன் தாஸின் சூப்பர்ஹீரோ..! மூன்றாவது போஸ்டர்!

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் சூப்பர்ஹீரோ படத்தின் மூன்றாவது போஸ்டர் குறித்து...

News image

சூப்பர்ஹீரோ படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / அர்ஜுன் தாஸ்.

Updated On :10 ஜூலை 2026, 5:27 pm IST

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் சூப்பர்ஹீரோ படத்தின் மூன்றாவது போஸ்டர் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி திரைப்படத்தின் மூலம் வில்லனாக புகழ்பெற்றார் அர்ஜுன் தாஸ். பின்னர், நாயகனாக நடித்து வருகிறார்.

தமிழில் பிரம்மாண்ட திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வந்தாலும் சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் குறைவாகவே வெளியாகியுள்ளன. மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் உருவான மின்னல் முரளி திரைப்படம் தமிழிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்தது.

மிஷ்கினின் முகமூடி, சிவகார்த்திகேயனின் மாவீரன் ஆகிய திரைப் படங்கள் மட்டுமே அவ்வாறான கதைக் களத்தில் உருவாகியுள்ளன. இந்த நிலையில், அர்ஜுன் தாஸ் இந்த வரிசையில் இணைந்துள்ளார்.

இந்தப் படத்தில் சாண்டி, தேஜு அஸ்வினி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விக்னேஷ் வேணுகோபால் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. ஆனால், நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸுக்குப் பிறகு வெளியாகுமென கூறப்பட்டுள்ளது.

Summary

Arjun Das SuperHero - Third Look Poster out now

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.