உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

அர்ஜூன் தாஸ் நடிக்கும் சூப்பர் ஹீரோ! ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகும் சூப்பர் ஹீரோ என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

News image

சூப்பர் ஹீரோ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Updated On :6 ஜூலை 2026, 7:17 pm IST

அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகும் சூப்பர் ஹீரோ என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

தமிழில் பிரம்மாண்ட திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வந்தாலும் சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் எனச் சொல்லும் விதமாக படங்கள் வெளியாவதில்லை. மிஷ்கினின் முகமூடி, ஷங்கரின் 2.0 போன்ற படங்கள் மட்டுமே அவ்வாறான கதைக் களத்தில் உருவாகின.

மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் உருவான மின்னல் முரளி திரைப்படம் தமிழிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்தது. ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்த நிலையில், தமிழில் அர்ஜூன் தாஸ் நாயகனாக நடிக்கும் படத்திற்கு ‘சூப்பர் ஹீரோ’ என பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் சாண்டி, தேஜு அஸ்வினி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விக்னேஷ் வேணுகோபால் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார்.

சூப்பர் ஹீரோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. படம் விரைவில் வெளியாகவுள்ளது.

சூப்பர் ஹீரோ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

சூப்பர் ஹீரோ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Summary

Superhero First Look Poster released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.