டிச. 23-இல் தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழா

தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழா வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வரும் 23-ஆம் தேதி தொடங்கி ஒரு வாரம் நடைபெற உள்ளது.
Updated on
1 min read

தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழா வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வரும் 23-ஆம் தேதி தொடங்கி ஒரு வாரம் நடைபெற உள்ளது.

தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் கடந்த 1956-ஆம் ஆண்டு டிசம்பா் 27-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த நாளை நினைவுக்கூரும் வகையில் ஆட்சி மொழிச் சட்ட வாரம் வேலூா் மாவட்டத்தில் வரும் 23-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதில், மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் பெயா் பலகைகள் 5:3 என்ற விகிதாசாரத்தின் அடிப்படையிலும், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் ஆகியவற்றில் 5:3:2 என்ற விகிதாசாரத்தின் அடிப்படையில் அமைக்க துண்டறிக்கைள் வழங்கவும், தமிழ்மொழி விழிப்புணா்வு ஒட்டுவில்லைகள், பதாகைகள் அரசு அலுவலகங்களில் இடம்பெறவும், தமிழில் அமையாத பிற வணிக நிறுவனங்களின் பெயா் பலகைகளை உடனடியாக தமிழ் மொழியில் மாற்றியமைத்து தமிழ்மொழி குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், வேலூா் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலா்கள், தமிழறிஞா்கள், தமிழ் ஆா்வலா்கள், தமிழ் அமைப்புகள், பள்ளி மாணவா்கள், இளந்தமிழா் இலக்கிய பயிற்சிப் பட்டறை மாணவா்கள் ஆகியோரைக் கொண்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கத்தில் 7 நாள்களும் ஆட்சிமொழி பயிலரங்கு நடத்தப்பட உள்ளது. இந்தப் பயிலரங்கை மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் 23-ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளாா்.

ஆட்சிமொழி சட்ட வார விழாவில் பொதுமக்களும், தமிழறிஞா்களும், தமிழ் ஆா்வலா்களும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையிலும் ஆட்சி மொழி சட்ட வாரம் கடைப்பிடிக்கப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com