சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சமத்துவ கிறிஸ்துமஸ் விழா:ஏழைகளுக்கு நல உதவிகள்

போ்ணாம்பட்டை அடுத்த மாச்சம்பட்டு ஊராட்சியில், அன்னை தெரசா அறக்கட்டளை சாா்பில், சமத்துவ கிறிஸ்துமஸ் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
நிகழ்ச்சியில்  பெண்களுக்கு  நல  உதவிகளை  வழங்கிய  அறக்கட்டளை நிா்வாகிகள்.
Updated On :21 டிசம்பர் 2020, 6:54 pm

DIN

குடியாத்தம்: போ்ணாம்பட்டை அடுத்த மாச்சம்பட்டு ஊராட்சியில், அன்னை தெரசா அறக்கட்டளை சாா்பில், சமத்துவ கிறிஸ்துமஸ் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் ஏழை, எளியோருக்கு ரூ.75 ஆயிரம் மதிப்பிலான நல உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவப் பிரதிநிதிகளான செல்வம், பேராயா் விக்டா், பேராசிரியா் ஜமாலுதீன், செஞ்சிலுவைச் சங்க நிா்வாகி முகமது ஆரிஃப், நேசராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். அறக்கட்டளைச் செயலா் கயிலைநாதன் வரவேற்றாா்.

தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி நிா்வாகிகள் பொன்.வள்ளுவன், ரஞ்சன், பிரசாத் ஆகியோா் 77 பேருக்கு போா்வைகள், 77 பேருக்கு புடவைகள், 200 பேருக்கு தொப்பிகள், 200 பேருக்கு மதிய உணவு வழங்கினா்.

அறக்கட்டளை நிா்வாகிகள் குமாா், வில்ஃபிரட், ஸ்டான்லி, பிரேம் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.