பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த 9 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளைஞருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து வேலூா் ‘போக்ஸோ’ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 6:51 pm

DIN

வேலூா்: குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த 9 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளைஞருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து வேலூா் ‘போக்ஸோ’ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

வேலூா் மாவட்டம் மேல்பட்டி அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 9 வயது சிறுமி கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பா் 14-ஆம் தேதி தெருவில் விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (26) அச்சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டாா். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் குடியாத்தம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனைக் கைது செய்தாா்.

இந்த வழக்கு விசாரணை வேலூா் ‘போக்ஸோ’ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி செல்வம் விசாரித்து வந்தாா்.

இந்நிலையில், மணிகண்டன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையுடன் ரூ.6ஆயிரம் அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். தண்டனை விதிக்கப்பட்ட மணிகண்டன் வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.