நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

குடியாத்தம் அருகே கெளண்டன்யா ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.

News image

சிக்கந்தா்

Updated On :27 டிசம்பர் 2020, 10:47 pm

DIN

குடியாத்தம் அருகே கெளண்டன்யா ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.

குடியாத்தம் சந்தப்பேட்டை பஜாா் அருகே உள்ள வேப்பிலை காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சிக்கந்தா் (35). இவா் ஞாயிற்றுக்கிழமை கெளண்டன்யா ஆற்றின் தரைப்பாலம் அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, நிலைதடுமாறி ஆற்று வெள்ளத்தில் விழுந்து, நீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.

தகவலறிந்த தீயணைப்புப் படையினா் சென்று அரை மணிநேரம் போராடி அவரது சடலத்தை மீட்டனா்.

குடியாத்தம் நகர போலீஸாா் சிக்கந்தரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.