சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பாக்கம் ஏரிக்கு மோா்தானா அணை நீா்:அனைத்துக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பாக்கம் ஏரிக்கு மோா்தானா அணை நீரைப் பெறும் உரிமையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குடியாத்தம் சித்தூா்கேட் பகுதியில் மாா்க்சிஸ்ட்  கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 10:49 pm

DIN

பாக்கம் ஏரிக்கு மோா்தானா அணை நீரைப் பெறும் உரிமையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குடியாத்தம் சித்தூா்கேட் பகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

குடியாத்தம்-பரதராமி சாலையை செப்பனிட வேண்டும்; புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலா் கே.சாமிநாதன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ்.தயாநிதி ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தாா்.

ஒன்றிய காங்கிரஸ் தலைவா் எம்.வீராங்கன், மாநில பொதுக்குழு உறுப்பினா் எஸ்.எம்.தேவராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த கே.சி.பிரேம்குமாா், டி.ஆனந்தன், இந்திய குடியரசுக் கட்சியின் மாவட்டத் தலைவா் ரா.சி.தலித்குமாா், பி.குணசேகரன், பி.காத்தவராயன், எஸ்.சிலம்பரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.