முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வேலூரில் சிஎம்சி மருத்துவர்கள் நான்கு பேர் உள்பட 8 பேருக்கு கரோனா

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் பணியாற்றும் 4 மருத்துவர்கள் உள்பட 8 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ள

News image
கோப்புப் படம்
Updated On :8 ஜூன் 2020, 5:58 am

DIN

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் பணியாற்றும் 4 மருத்துவர்கள் உள்பட 8 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்களுக்கு சிஎம்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 வேலூர் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன்படி, ஞாயிற்றுக்கிழமை வரை 109 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், மாவட்டம் முழுவதும் 8 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதில், 4 பேர் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களாவர்.

மேலும், குடியாத்தத்தில் 29 வயது ஆண், வேலூர் காகிதப்பட்டறையில் 28 வயது பெண், தோட்டப்பாளையத்தில் 77 வயது ஆண், 69 வயது பெண் ஆகியோரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சென்னையில் இருந்து அண்மையில் வேலூர் மாவட்டத்துக்கு வந்தவர்களாவர். தொடர்ந்து, இவர்களுக்கு சிஎம்சி மற்றும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.