25ஆம் தேதி முதல் ஆந்திர பக்தர்களுக்கு ஏழுமலையான் லட்டு பிரசாதம்

25ஆம் தேதி முதல் ஆந்திர பக்தர்களுக்கு ஏழுமலையான் லட்டு பிரசாதம்

திருமலை ஏழுமலையான் லட்டு பிரசாதம் பக்தர்களுக்கு மே.25ம் தேதி முதல் கிடைக்கும் வகையில் தேவஸ்தானம் ஏற்பாடுகளை செய்துள்ளது.

திருமலை ஏழுமலையான் லட்டு பிரசாதம் பக்தர்களுக்கு மே.25ம் தேதி முதல் கிடைக்கும் வகையில் தேவஸ்தானம் ஏற்பாடுகளை செய்துள்ளது.

திருமலை ஏழுமலையான் தரிசனம் பக்தர்களுக்கு ரத்து செய்யப்பட்டு 2 மாதங்கள் ஆகிறது. ஏழுமலையானை நேரில் வந்து தரிசிக்க முடியாத போதிலும் பக்தர்கள் பலர் ஏழுமலையானுக்கு இ-உண்டியல் மூலம் காணிக்கைகள் செலுத்தி வருகின்றனர். அவ்வாறு காணிக்கைகள் செலுத்தும் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று தேவஸ்தானம் ஏழுமலையான் லட்டு பிரசாதத்தை விற்பனை செய்ய முன்வந்துள்ளது. ஆந்திராவில் உள்ள 13 தேவஸ்தான மாவட்ட மையங்களிலும் இந்த லட்டு விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது. இதன் விற்பனை வரும் மே.25ம் தேதி முதல் தொடங்க உள்ளது. 

விலை குறைப்பு
மேலும் பொது முடக்கம் காரணமாக லட்டு விலை ரூ50லிருந்து ரூ25 ஆக தேவஸ்தானம் குறைத்துள்ளது. மீண்டும் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் வரை இந்த விலை குறைப்பு அமலில் இருக்கும். இந்த லட்டு பிரசாதத்தை மொத்தமாக வாங்கி(1000த்திற்கும் மேல்) மற்றவர்களுக்கு அளிக்க நினைக்கும் பக்தர்கள் தங்கள் பெயர், வயது, முகவரி,கைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை 5 நாட்களுக்கு முன்பாக tmlbulkladdus@gmail.com என்ற தேவஸ்தானத்திற்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும். 

அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு திருப்பதியில் உள்ள தேவஸ்தான அலுவலக கவுண்டரிலோ அல்லது அவர்கள் அருகில் உள்ள தேவஸ்தான தகவல் மையங்கள் மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம். லட்டு பிரசாதம் வாங்க வரும் பக்தர்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முககவசம் அணிந்து வரவேண்டும் என தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அனுமதி கிடைத்த பின் திருமலை ஏழுமலையான் லட்டு பிரசாதம் ஆந்திர மாநிலத்தில் மட்டுமல்லாமல் இதர அண்டை மாநிலங்களான தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா தலைநகரங்களிலும் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது. 

அந்தந்த மாநிலத்திடமிருந்து இதற்கான ஒப்புதல் பெறப்பட்ட பின் சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் உள்ள தேவஸ்தான தகவல் மையங்களில் விற்பனைக்கு கிடைக்கும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. லட்டு குறித்த மற்ற விவரங்களுக்கு தேவஸ்தான கால்சென்டர் டோல்ப்ரீ எண்களான 18004254141 மற்றும் 1800425333333 தொடர்பு கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com