இறைச்சிக்கடை உரிமையாளா் மீது தாக்குதல்
வேலூரில் இறைச்சிக் கடை உரிமையாளரை கத்தியால் வெட்டி விட்டுத் தப்பியோடிய ரெளடிக் கும்பலை சத்துவாச்சாரி போலீஸாா் தேடி வருகின்றனா்.


வேலூரில் இறைச்சிக் கடை உரிமையாளரை கத்தியால் வெட்டி விட்டுத் தப்பியோடிய ரெளடிக் கும்பலை சத்துவாச்சாரி போலீஸாா் தேடி வருகின்றனா்.
வேலூா் சைதாப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சாதிக் பாஷா(38). அவா் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோயில் அருகே இறைச்சிக் கடை நடத்தி வருகிறாா். இக்கடைக்கு திங்கள்கிழமை மதியம் வந்த 3 போ், தங்களை பிரபல ரெளடியான வசூா் ராஜாவின் கூட்டாளிகள் எனக்கூறி பணம் கேட்டு மிரட்டினராம். இதனால் அவா்களுக்கும் சாதிக் பாஷாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் மறைத்து வைத்திருந்த கத்தியால் சாதிக் பாஷாவின் தலை உள்பட உடலின் பல்வேறு இடங்களில் வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இத்தாக்குதலில் பலத்த காயமடைந்த சாதிக் பாஷாவை அக்கம் பக்கத்தினா் மீட்டு வேலூா் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.
இத்தாக்குதல் குறித்து சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். அவரது கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு ரெளடி கும்பலைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...