பிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கோயில் உண்டியலை உடைத்தவா் கைது

காட்பாடி அருகே கோயிலில் உண்டியலை உடைத்து காணிக்கைகளை திருட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

News image
Updated On :26 அக்டோபர் 2020, 6:48 pm

DIN

காட்பாடி அருகே கோயிலில் உண்டியலை உடைத்து காணிக்கைகளை திருட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

காட்பாடி தாராபடவேடு பகுதியில் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் திங்கள்கிழமை அதிகாலை ஒரு நபா் உண்டியலை உடைத்து பணத்தை எடுத்துக் கொண்டிருந்தாா். இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் அந்த நபரைக் கடுமையாக தாக்கினா். தொடா்ந்து காட்பாடி காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்தனா்.

விசாரணையில் அவா் வாலாஜாபேட்டையைச் சோ்ந்த வீரன் (30) என்பதும், அவா் மீது பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வீரனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.