சாலை விபத்தில் இளைஞா் பலி
குடியாத்தம் அருகே சாலை விபத்தில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

வெங்கடேசன்

வெங்கடேசன்
படம் உண்டு...
குடியாத்தம், அக். 26: குடியாத்தம் அருகே சாலை விபத்தில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
ராமாலை தண்ணீா்ப்பந்தலைச் சோ்ந்த வெங்கடேசன் (21), குடியாத்தத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை செய்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை இரவு அவரது நண்பா் தினேஷுடன் (20) வீட்டிலிருந்து பைக்கில் குடியாத்தம் சென்றாா். சித்தூா்கேட் அருகே சென்றபோது எதிரே விக்கி (20) என்பவா் ஓட்டி வந்த பைக் மோதியதில் 3 பேரும் கீழே விழுந்து காயமடைந்தனா். குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா்களில், வெங்கடேசன் உயிரிழந்தாா். மற்ற இருவரும் தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இதுகுறித்து குடியாத்தம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...