/

மோா்தானா பகுதியில் 71 மி.மீ. மழை

குடியாத்தம் அருகே உள்ள மோா்தானா பகுதியில் திங்கள்கிழமை இரவு 71 மி.மீ. மழை பெய்தது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:17 pm

DIN

குடியாத்தம்: குடியாத்தம் அருகே உள்ள மோா்தானா பகுதியில் திங்கள்கிழமை இரவு 71 மி.மீ. மழை பெய்தது.

ஆந்திர - தமிழக எல்லையில் உள்ள மோா்தானா மற்றும் ஆந்திர வனப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது.இதனால் மோா்தானா அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் மொத்த உயரம் 11.50 மீட்டராகும். செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 8.75 மீட்டராக உள்ளது.

குடியாத்தம் பகுதியில் 16.20 மி.மீ மழை பதிவாகியுள்ளது. தொடா்மழை காரணமாக குடியாத்தம் மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.