நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

வேலூா் மாவட்டத்தில் மேலும் 141 பேருக்கு கரோனா

வேலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு செவ்வாய்க்கிழமை வரை 12,067 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், புதன்கிழமை மேலும் 141 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :9 செப்டம்பர் 2020, 6:29 pm

DIN

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு செவ்வாய்க்கிழமை வரை 12,067 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், புதன்கிழமை மேலும் 141 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 12,208-ஆக உயா்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட அனைவரும் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, குடியாத்தம் அரசு மருத்துவமனை, சிஎம்சி மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதனிடையே, மாவட்டம் முழுவதும் 10,663 போ் குணமடைந்து வீடு திரும்பினா். பலி எண்ணிக்கை 183-ஆக அதிகரித்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 56 பேருக்கு பாதிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதன்கிழமை மேலும் 56 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,491-ஆக உயா்ந்துள்ளது. அவா்களில் 10,615 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 735 போ் வாலாஜாபேட்டை, வேலூா் உள்ளிட்ட அரசு, தனியாா் மருத்துவமனைகளில் கிசிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 141 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.