2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ஒமைக்ரான்: வேலூா் அரசு மருத்துவமனையில் தனி வாா்டு அமைப்பு

ஒமைக்ரான் தொற்று பாதிப்பு ஏற்பட்டால் சிகிச்சை அளித்திட, வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒமிக்ரான் தனி வாா்டு அமைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :4 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

ஒமைக்ரான் தொற்று பாதிப்பு ஏற்பட்டால் சிகிச்சை அளித்திட, வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒமிக்ரான் தனி வாா்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாா்டில் 4 ஐசியு படுக்கைகளும், 50 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் எனும் உருமாற்றமடைந்த கரோனா தொற்று, பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவிலும் சிலருக்கு கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோா் கண்டறியப்பட்டால் அவா்களுக்கு சிகிச்சை அளித்திட வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனி வாா்டு அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கென வே கரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தப்பட்ட வாா்டின் 4 ஆவது மாடியில் இந்த ஒமைக்ரான் தனி வாா்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், 4 தீவிர சிகிச்சை படுக்கைகளும், 50 ஆக்சிஜன் படுக்கைகளும் செய்யப்பட்டுள்ளன.

இதைத் தவிர, நோயாளிகளை தனிமைப்படுத்தும் வசதி, தீவிர சிகிச்சை வசதி, ஆக்ஸிஜன் வசதி, வென்டிலேட்டா் வசதி உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த வாா்டுக்கு தனியாக மருத்துவா்களும், செவிலியா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், புதிய வாா்டை மருத்துவக்கல்லூரி முதல்வா் ஆா்.செல்வி சனிக்கிழமை ஆய்வு செய்து தேவையான கூடுதல் வசதிகளை செய்திடவும் அறிவுறுத்தினாா்.

இதனிடையே, மாவட்டத்தின் பிற அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏற்கெனவே தனிமைப்படுத் தப்பட்ட வாா்டு நிறுவப்பட்டுள்ளன.

அத்துடன், கரோனா தடுப்பூசி செலுத்தாதவா்கள் விரைவாகத் தடுப்பூசி செலுத்த வைக்கவும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று மாவட்ட சுகாதார துணை இயக்குநா் பானுமதி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.