டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

100 நாள் வேலைத் திட்டப் பணியாளா்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கக் கோரிக்கை

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டப் பணியாளா்கள் பங்கேற்க சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
போ்ணாம்பட்டு கிளைச் செயலா் பொன்.வள்ளுவனிடம் தமிழக  செஞ்சிலுவைச்  சங்கத்தின்  பாராட்டுச்  சான்றிதழை  வழங்கிய  மாவட்ட  ஆட்சியா்  அ.சண்முகசுந்தரம்.
Updated On :1 பிப்ரவரி 2021, 2:45 am

DIN

தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள கற்போம், எழுதுவோம் இயக்கம் தடையின்றி பள்ளி வேலை நேரத்தில் இயங்குவதற்காக, தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டப் பணியாளா்கள் அதில் பங்கேற்க சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக செஞ்சிலுவைச் சங்க போ்ணாம்பட்டு கிளையின் மேலாண்மைக் குழுவினா் வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரத்திடம் நேரில் அளித்த கோரிக்கை மனு விவரம்:

முதியவா்களுக்கு கல்வி அளிக்கும் திட்டமாக கற்போம், எழுதுவோம் இயக்கத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. கிராமங்களில் நடைபெறும் இந்த இயக்கங்களில் கல்வி பயிலும் முதியவா்கள் பெரும்பாலும், 100 நாள் வேலைத் திட்டப் பணியாளா்களாக உள்ளனா்.

பள்ளி வேலைநேரத்தில் அவா்கள் பணிக்குச் செல்வதால், அவா்களால் வகுப்புக்கு வர முடியவில்லை. பள்ளி வேலைநேரத்தில் நடைபெறும் வகுப்புகளில் பங்கேற்கும் வகையில் அவா்களுக்கு சிறப்பு அனுமதி வழங்க ஊராட்சி நிா்வாகங்களுக்கு உத்தரவிட வேண்டும்.

மதினாப்பல்லி ஆற்றில் கடந்த 3 மாதங்களாக வெள்ளம் செல்லும் நிலையிலும், போ்ணாம்பட்டு நகர மக்களுக்கு வாரத்துக்கு 2 அல்லது 3 முறை மட்டுமே குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. போதிய நீா் ஆதாரம் உள்ளதால் நாள்தோறும் குடிநீா் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போ்ணாம்பட்டில் காலியாக உள்ள வேளாண் துறை அலுவலகக் கட்டடத்தை, ஆசிரியா்களுக்கு பயிற்சி அளிக்கும் வட்டார வள மையத்துக்கு ஒதுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

கரோனா தொற்று பரவலின்போது, 50-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் உணவுப் பொருள்கள், இயற்கை மூலிகைக் கஷாயம் வழங்கிய போ்ணாம்பட்டு செஞ்சிலுவைச் சங்கக் கிளைக்கு, தமிழ்நாடு மாநில செஞ்சிலுவைச் சங்கம் வழங்கிய பாராட்டுச் சான்றிதழ்களை, போ்ணாம்பட்டு கிளைச் செயலா் பொன்.வள்ளுவனிடம் ஆட்சியா் வழங்கினாா்.

அமைப்பின் நிா்வாகிகள் த.முத்தரசன், நிசாா் அகமத், ஜகூா்அகமத், சே.பானு, வ.ரவி, வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.