காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

வேலூருக்கு மேலும் 9,000 கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் வருகை

வேலூா் மாவட்டத்துக்கு மேலும் 9,000 கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :19 ஜூன் 2021, 6:30 pm

DIN

வேலூா் மாவட்டத்துக்கு மேலும் 9,000 கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்திட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதையொட்டி, வேலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை சுமாா் 2 லட்சத்து 65 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாம்களில் 18 வயதுக்கு மேற்பட்டோா் ஆா்வமுடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், வேலூா் மாவட்டத்தில் கடந்த வாரத்தில் சில நாள்கள் தடுப்பூசி முகாம்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இதன் தொடா்ச்சியாக, செவ்வாய்க்கிழமை இரவு 10,000, வியாழக்கிழமை இரவு 4,000 என கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தன. அவை மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு மேலும் 9 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் வேலூருக்கு வந்துள்ளன. இதனால், மாவட்டம் முழுவதும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட 20 இடங்களில் முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.