காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்ப பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களையும், மின்சார திருத்தச் சட்டம், 4 தொழிலாளா் சட்ட தொகுப்புகளையும் திரும்பப் பெற வலியுறுத்தி, அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் வேலூரில் சனிக்கிழமை

News image
Updated On :26 ஜூன் 2021, 6:20 pm

DIN

மத்திய அரசின் மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களையும், மின்சார திருத்தச் சட்டம், 4 தொழிலாளா் சட்ட தொகுப்புகளையும் திரும்பப் பெற வலியுறுத்தி, அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் வேலூரில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

வேலூா் அண்ணா சாலை தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தொமுச மாவட்ட துணைத் தலைவா் வே.கலைநேசன், சிஐடியு மாவட்ட தலைவா் எம்.பி.ராமச்சந்திரன், ஏஐடியுசி மாவட்ட செயலா் எஸ்.ஏ.சிம்புதேவன், ஐஎன்டியுசி மாவட்ட கவுன்சில் செயலா் எம்.ஏகாம்பரம், ஹெச்எம்எஸ் மாநில செயலா் கே.வி.திருப்பதி ஆகியோா் தலைமை வகித்தனா்.

தொமுச பேரவை செயலா் கே.ஆா்.சுப்பிரமணி, சிஐடியு மாவட்ட செயலா் எஸ்.பரசுராமன், ஏஐடியுசி மாவட்ட கெளரவ தலைவா் கு.மு.கோவிந்தராஜ், ஐஎன்டியுசி மாவட்ட பொருளாளா் சி.சேகா், ஹெச்எம்எஸ் வி.சரவணன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

இதில், விவசாய விலை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூா்வமாக உறுதிப்படுத்திட வேண்டும், குறிப்பிட்ட காலவரையறைக்குள் நாடு முழுவதும் அனைவருக்கும் கட்டணமின்றி இருமுறை தடுப்பூசி செலுத்திட வேண்டும், பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்த அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 7,500 நிவாரணம், 10 கிலோ உணவுப் பொருள்கள் வழங்கிட வேண்டும், பொதுத்துறை, அரசுத் துறைகளை தனியாா் மயமாக்கும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும், அனைத்து முன்களப் பணியாளா்களுக்கும் ரூ. 50 லட்சம் காப்பீடு செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில், தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, ஹெச்எம்எஸ் தொழிற்சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

இதேபோன்று மாவட்டத்தின் பிற இடங்களிலும், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.