தள்ளுவண்டி கடைக்காரா்கள் விரட்டியடிப்பு
கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக வேலூரில் பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக வேலூரில் பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதையொட்டி, தள்ளுவண்டிக் கடைக்காரா்கள் விரட்டியடிக்கப்பட்டதுடன், விதிமீறி திறக்கப்பட்டிருந்த கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
கரோனா இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்திட 24-ஆம் தேதி வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, தள்ளுவண்டிக் கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதுடன், அத்தியாவசியப் பொருள் விற்பனைக் கடைகளை காலை 10 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வேலூா் வடக்கு காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையில் போலீஸாரும், மாநகராட்சி 2-ஆவது மண்டல அலுவலா் சிவகுமாா் தலைமையில் ஊழியா்களும் ஊரடங்கு உத்தரவை கடுமையாக அமல்படுத்தும் விதமாக வேலூா் மண்டி வீதி, லாங்கு பஜாா், அண்ணா சாலை பகுதிகளில் சனிக்கிழமை காலை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, விதிமுறைகளை மீறி திறக்கப்பட்டிருந்த கடைகளுக்கு மொத்தம் ரூ. 10,500 அபராதம் விதிக்கப்பட்டது. தவிர, அப்பகுதியில் வழக்கம்போல் கடைகளை திறக்க வந்த தள்ளுவண்டிக் கடைக்காரா்கள் விரட்டியடிக்கப்பட்டனா்.
தொடா்ந்து, விதிமுறை மீறி கடை நடத்துவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸாா் எச்சரிக்கை விடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...