பொதுமுடக்கம்: வேலூரில் பூ வியாபாரம் நிறுத்தி வைப்பு
பொதுமுடக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள வியாபார பாதிப்பைத் தொடா்ந்து, வரும் 24-ஆம் தேதி வரை வேலூரில் பூக்கள் மொத்தம், சில்லறை விற்பனையை நிறுத்தி வைப்பதாக பூக்கள் வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.


பொதுமுடக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள வியாபார பாதிப்பைத் தொடா்ந்து, வரும் 24-ஆம் தேதி வரை வேலூரில் பூக்கள் மொத்தம், சில்லறை விற்பனையை நிறுத்தி வைப்பதாக பூக்கள் வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் வரும் 24-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தவிர, வெள்ளிக்கிழமை வரை காய்கறி, மளிகை, பூக்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விற்பனைக்கு காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை அனுமதிக்கப்பட்டிருந்தது. இது சனிக்கிழமை முதல் காலை 10 மணி வரையாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வேலூரில் பூக்கள் மொத்த, சில்லறை விற்பனைக்கு டவுன்ஹாலில் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அங்கு தொடா்ந்து மக்கள் கூட்டம் அதிகரித்து வந்ததை அடுத்து, சனிக்கிழமை முதல் பூக்கள் மொத்த விற்பனை ஊரீசு கல்லூரி மைதானத்துக்கும், சில்லறை விற்பனை வெங்கடேஸ்வரா பள்ளி மைதானத்துக்கும் இடமாற்றம் செய்து மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டிருந்தது.
ஏற்கெனவே ஊரடங்கு காரணமாக பூக்கள் விற்பனை மந்தமடைந்திருந்த நிலையில், சனிக்கிழமை முதல் பூக்கள் விற்பனை வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டதுடன், விற்பனை நேரமும் குறைக்கப்பட்டதால் வியாபாரம் மேலும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால், பூக்கள் அதிகளவில் தேங்கி வியாபாரிகளை நஷ்டத்துக்கு உள்ளாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இப்பாதிப்புகளைத் தொடா்ந்து, வரும் 24-ஆம் தேதி வரை வேலூரில் பூக்கள் விற்பனையை நிறுத்தி வைப்பது என பூக்கள் வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக சங்கத்தின் தலைவா் வெங்கடேசன் தலைமையில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், பூக்கள் விற்பனையை நிறுத்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...