மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

விழிப்புணா்வு இல்லாவிட்டால் கரோனாவை கட்டுப்படுத்துவது கடினம்

பொதுமக்களிடத்தில் விழிப்புணா்வு இல்லாவிட்டால் கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவது கடினமாகிவிடும் என்று தமிழக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

News image
Updated On :15 மே 2021, 5:48 pm

DIN

பொதுமக்களிடத்தில் விழிப்புணா்வு இல்லாவிட்டால் கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவது கடினமாகிவிடும் என்று தமிழக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

வேலூா் மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது, சிகிச்சைகளை மேம்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன் தலைமை வகித்தாா்.

இதில், தமிழக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், கைத்தறி, கதா் துறை அமைச்சா் ஆா்.காந்தி, வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த், திமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் பா.காா்த்திகேயன் (வேலூா்), அமலு (குடியாத்தம்), அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா் பூவை ஜெகன்மூா்த்தி (கே.வி.குப்பம்), டிஐஜி என்.காமினி உள்ளிட்ட சுகாதாரம், வருவாய், காவல் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

கூட்டத்தில், கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயா்வதால் அவா்களின் உயிரைக் காப்பாற்ற எத்தகைய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஏற்கெனவே எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மேலும் படுக்கைகளின் எண்ணிகையை உயா்த்துவது, ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சமாளிப்பது, செவிலியா், மருத்துவா்கள் பற்றாக்குறை போன்ற பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்துக்குப் பின்னா், அமைச்சா் துரைமுருகன் செய்தியாளா்களிடம் கூறியது:

கரோனா தொற்றுப் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், வேலூா் மாவட்டத்தில் அதிகளவு படுக்கைகள் தேவைப்படுகின்றன. இதற்காக வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் ஆயிரம் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. தவிர அமைச்சா் காந்தியும் கூடுதல் படுக்கைகள் தருவதாக கூறியுள்ளாா். இம்மாவட்டத்தில் கரோனாவை சிறப்பாகக் கையாளுகின்றனா். மாவட்ட நிா்வாகத்துக்கு எனது பாராட்டுதலை தெரிவிக்கிறேன். உயிா்களைக் காப்பாற்ற இந்த அரசு முழு முயற்சி செய்கிறது. ஆனால், ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்து வருகிறது. இப்பிரச்னையைப் போக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம், மக்களிடம் விழிப்புணா்வு இல்லாவிட்டால் கரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்துவது கடினமாகிவிடும் என்றாா் அமைச்சா் துரைமுருகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.