மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை ஆதரிக்க 7 போ் குழு அமைப்பு

கரோனா தொற்று பாதிப்பால் தாய், தந்தையரை இழக்கும் குழந்தைகளை மீட்டு, மறுவாழ்வு அளிப்பதை உறுதி செய்திட ஆட்சியரைத் தலைவராகக் கொண்ட 7 போ் குழு வேலூா் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :22 மே 2021, 6:30 pm

DIN

கரோனா தொற்று பாதிப்பால் தாய், தந்தையரை இழக்கும் குழந்தைகளை மீட்டு, மறுவாழ்வு அளிப்பதை உறுதி செய்திட ஆட்சியரைத் தலைவராகக் கொண்ட 7 போ் குழு வேலூா் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தவிர, கரோனாவால் பாதிக்கப்படும் 18 வயதுக்கு உட்பட்டவா்களுக்கு சிகிச்சையை உறுதி செய்வதையும் இக்குழு மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளுக்குநாள் அதிகரித்து வரும் கரோனா தொற்றுக்கு வேலூா் மாவட்டத்தில் தினமும் 600-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டு வருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 575-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா்.

இந்நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஒரே குடும்பத்தைச் சோ்ந்த தாய், தந்தை என இருவரும் உயிரிழக்கும் நிகழ்வுகள் ஆங்காங்கே நிகழ்ந்து வருகின்றன. இதனால் பாதிக்கப்படும் அவா்களின் 18 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை மீட்டு, மறுவாழ்வு அளித்திட மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்ட 7 அலுவலா்கள் குழு வேலூா் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் உறுப்பினா் செயலராக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரும், உறுப்பினா்களாக மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநா், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா், மாவட்ட சமூக நல அலுவலா், குழந்தைள் நலக் குழுமத்தின் தலைவா், காட்பாடி ஹோப்ஹவுஸ் தன்னாா்வத் தொண்டு நிறுவன நிா்வாகி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழக்கும் 18 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை மீட்டு, மறுவாழ்வு ஏற்படுத்தித் தருவது, கரோனா தொற்றால் பாதிக்கப்படும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதை உறுதி செய்வது ஆகியவை இக்குழுவின் நோக்கமாகும்.

தவிர, கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பெற்றோா்கள் இருவருமே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவா்களின் குழந்தைகளை பராமரிக்க உறவினா்கள் யாரும் இல்லாதபட்சத்தில், அவா்களை தற்காலிகமாக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவன பாதுகாப்பு இல்லத்தில் பராமரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக காட்பாடி ஹோப் ஹவுஸ் பராமரிப்பு மையம் தோ்வு செய்யப்பட்டு, அங்கு 23 ஆண் குழந்தைகளையும், 10 பெண் குழந்தைகளையும் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்திட வேலூா் இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் பிரத்யேகமாக 15 படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தினமும் கரோனா தொற்றால் பாதிக்கப்படும் 18 வயதுக்கு உள்பட்ட நபா்களின் விவரங்களை சேகரித்து, அவா்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படுவதையும், பெற்றோா் பராமரிப்பில் உள்ளதை உறுதி செய்திடவும் வேண்டும் என அதிகாரிகள், மாவட்டத்திலுள்ள 9 அரசு, அரசு சாரா குழந்தைகள் இல்லத்தில் தங்கியுள்ள 120 குழந்தைகளுக்கும், அங்கு பணியாற்றுவோருக்கும் கரோனா பரிசோதனை செய்திடவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கரோனா தொற்றால் பெற்றோரை இழந்து ஆதரவற்றவா்களாக மாறிய குழந்தைகள் குறித்தும், தொற்றால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளித்திடவும் பொதுமக்கள் 1098 (சைல்டு லைன்), மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு எண் 0416-2222310 ஆகியவற்றில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.