வேலூரில் மேலும் 595 பேருக்கு கரோனா
கரோனா தொற்றுப் பரவல் தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 595 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


கரோனா தொற்றுப் பரவல் தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 595 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38,176-ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்று இரண்டாவது அலையால் வேலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 37,581 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். 32,568 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 3,465 போ் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 588 போ் உயிரிழந்தனா்.
இந்நிலையில், மாவட்டத்தில் சனிக்கிழமை புதிதாக 595 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 350-க்கும் மேற்பட்டோா் வேலூா் மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்தவா்களாவா். மற்றவா்கள் மாவட்டத்தின் இதர பகுதிகளைச் சோ்ந்தவா்கள்.
அதிகரித்து வரும் கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த வேலூா் மாவட்டத்தில் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. பாதிப்பு அதிகமுள்ள தெருக்கள் இரும்புத் தகடுகள் வைத்து மூடப்படுகின்றன. இந்த தெருக்களில் பொதுமக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...