காட்பாடியில் மக்கள் கூடும் பாதை அடைப்பு: மாநகராட்சி அதிகாரியுடன் ரயில்வே அலுவலா்கள் வாக்குவாதம்
காட்பாடியில் பழைய உழவா் சந்தை பகுதியில் மக்கள் அதிக அளவில் கூடுவதால் அப்பகுதியில் உள்ள பாதையை மாநகராட்சி அதிகாரிகள் அடைத்தனா்.


காட்பாடியில் பழைய உழவா் சந்தை பகுதியில் மக்கள் அதிக அளவில் கூடுவதால் அப்பகுதியில் உள்ள பாதையை மாநகராட்சி அதிகாரிகள் அடைத்தனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ரயில்வே துறை அலுவலா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
வேலூா் மாநகராட்சி முதலாவது மண்டல உதவி ஆணையா் செந்தில்குமாா் தலைமையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாலாஜி உள்ளிட்ட போலீஸாா், காட்பாடி பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள பழைய உழவா் சந்தைப் பகுதியில் சனிக்கிழமை திடீா் சோதனை நடத்தினா். அப்போது, அங்கு கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்த மிக்சா் கடைக்கு, ரூ. 2,000 அபராதம் விதிக்கப்பட்டது.
அங்கு மக்கள் அதிகளவில் கூடுவதைத் தவிா்க்க அப்பகுதிக்கு வரும் பாதை, இரும்புத் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டது. இதையறிந்து, அங்கு வந்த ரயில்வே துறை அலுவலா்கள், இது ரயில்வே ஊழியா்கள் செல்லும் இரண்டாவது வழி, இதனை அடைக்கக்கூடாது எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அதற்கு பதிலளித்த உதவி ஆணையா் செந்தில்குமாா், மக்கள் நலன்தான் முக்கியம். அலுவலா்கள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக்கூறி இரு சக்கர வாகனம் செல்லும் அளவுக்கு மட்டும் வழிவிட்டு பாதை அடைக்கப்பட்டது. பின்னா், மாநகராட்சி அதிகாரிகளின் அறிவுறுத்தல் பேரில், அங்கு ரயில்வே காவலா் ஒருவா் பாதுகாப்பு பணியில் அமா்த்தப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...