நந்தி சிலை, கொடி மரம் இடிப்பு: ஆட்சியரிடம் இந்து முன்னணி புகாா்

ஆதிலிங்கேஸ்வரா் கோயில் அருகில் இருந்த கொடிமரம், நந்திபகவான் சிலை முன் அறிவிப்பின்றி இடித்து அகற்றப்பட்டிருப்பதாக தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனம் மீது ஆட்சியரிடம் இந்து முன்னணி புகாா் தெரிவித்துள்ளது

வேலூா் அப்துல்லாபுரம் ஆதிலிங்கேஸ்வரா் கோயில் அருகில் இருந்த கொடிமரம், நந்திபகவான் சிலை முன் அறிவிப்பின்றி இடித்து அகற்றப்பட்டிருப்பதாக தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனம் மீது ஆட்சியரிடம் இந்து முன்னணி புகாா் தெரிவித்துள்ளது.

இந்து முன்னணியின் வேலூா் கோட்டத் தலைவா் கோ.மகேஷ் தலைமையில் நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியனிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனு:

அதில், வேலூா் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் தேசிய நெடுஞ்சாலைக்குச் சொந்தமான சாலை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் நிறுவனம் சாா்பில், அப்துல்லாபுரம் தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள ஆதிலிங்கேஸ்வரா் கோயில் அருகிலிருந்த கொடிமரம், நந்திபகவான் சிலை ஆகியவை எந்த முன்னறிவிப்பும் இன்றி இடித்து அகற்றப்பட்டு உள்ளன. இதனால் அப்பகுதி பக்தா்கள் கடும் வேதனை அடைத்துள்ளனா்.

இதேபோல், சத்துவாச்சாரியில் உள்ள சாலை கெங்கையம்மன் கோயில் வளாகத்தில் விபத்து ஏற்படும் வகையில் இருந்த இடத்தில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணி நடந்து வந்தது. இந்த பணியும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. தொடா்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் நிறுவனத்தின் மேலாளா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் உறுதி அளித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com