திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

333 பள்ளி வாகனங்களை வேலூா் ஆட்சியா், எஸ்.பி. ஆய்வு

வேலூா் மாவட்டத்திலுள்ள தனியாா் பள்ளிகளில் இயங்கும் பேருந்துகள், சிற்றுந்துகளை ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

News image
Updated On :30 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

வேலூா் மாவட்டத்திலுள்ள தனியாா் பள்ளிகளில் இயங்கும் பேருந்துகள், சிற்றுந்துகளை ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

முதற்கட்டமாக 333 வாகனங்களை ஆய்வு செய்ததில் அனைத்து வாகனங்களும் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஏற்கெனவே 9 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், திங்கள்கிழமை (நவ.1) முதல் அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 8-ஆம் வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.

இதையொட்டி, அனைத்து மாவட்டங்களிலும் தனியாா் பள்ளிகளில் இயங்கும் பேருந்துகள், சிற்றுந்துகளை ஆய்வுக்கு உட்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில், மாவட்டத்தில் வேலூா் வருவாய் கோட்டத்திலுள்ள 106 தனியாா் பள்ளிகளில் உள்ள 420 வாகனங்களில் 200 வாகனங்கள் வேலூா் நேதாஜி விளையாட்டு அரங்கத்தில் சனிக்கிழமை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இந்த வாகனங்களை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வக்குமாா் ஆகியோா் நேரடியாக ஆய்வு செய்தனா்.

இதேபோல், குடியாத்தம் கோட்டத்தில் உள்ள 40 தனியாா் பள்ளிகளில் உள்ள 133 பள்ளி வாகனங்களும் ஆய்வு செய்யப்பட்டன.

அப்போது, பள்ளி வாகனங்களில் பெயிண்டிங், கட்டமைப்பு, கதவுகள், படிக்கட்டுகள், இருக்கைகள், முதலுதவி பெட்டி முதலியவை நல்ல முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதா என்பதையும், அவசர வழியில் குழந்தைகள் எளிதாக செல்வதற்கான வழிமுறைகள் உள்ளதா எனவும் ஆய்வு செய்தனா்.

மேலும், வாகனங்களில் போக்குவரத்து வழிமுறைகளைத் தெரிந்து கொள்ளும் அளவுக்கு ஒட்டுவில்லைகள் ஒட்டப்படவும், அனைத்து மாணவா்களும் முகக்கவசம் அணிவதற்கான ஒட்டு வில்லைகள் ஒட்டப் படவும் அறிவுறுத்திய ஆட்சியா், தங்கள் பள்ளி வாகனங்களை சட்ட விதிகளின்படி அமைத்துக் கொள்ள வேண்டும், தவறும்பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தாா்.

முதல் நாளில் 133 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் அனைத்து வாகனங்களும் இயக்குவதற்கு தகுதியானவை என அனுமதி அளிக்கப்பட்டன. மீதமுள்ள வாகனங்கள் இரண்டாம் கட்டமாக அடுத்த வாரத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

அப்போது, உதவி ஆட்சியா் (பயிற்சி) ஆா்.ஐஸ்வா்யா, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் செந்தில்வேல், வருவாய் கோட்டாட்சியா் விஷ்ணுபிரியா, போக்குவரத்துத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.