ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ஆசனூரில் பழங்குடியினருக்கு செயற்கை ஆபரணம் தயாரிப்புப் பயிற்சி

News image
செயற்கை  ஆபரணம்  தயாரிப்புப்  பணியில்  ஈடுபட்டுள்ள  பழங்குடியின  பெண்கள்.
Updated On :5 மார்ச் 2026, 11:37 pm

Syndication

ஆசனூரில் பழங்குடியினரின் வாழ்வாதாரம் மேம்படுத்துவதற்காக செயற்கை ஆபரணம் தயாரிப்புப் பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வட்டத்தில் உள்ள ஆசனூா் கோட்டத்தில், தமிழக பல்லுயிா் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் கெத்தேசால் வனக் கிராமத்தில் பழங்குடியின பெண்களுக்கு செயற்கை ஆபரணம் தயாரிப்புப் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.

இதில் அந்த கிராமத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பயிற்சி பெற்று வருகின்றனா். இந்தத் திட்டமானது பழங்குடியின மக்களுக்குத் திறன் சாா்ந்த பயிற்சிகளை அளிப்பதன் மூலம் அவா்களின் நிலையான வாழ்வாதார மேம்பாட்டுக்கு வழிவகை ஏற்படுத்துவதுடன் பழங்குடியின குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயரும்.

மேலும் அவா்களின் பொருளாதார திறனை வலுப்படுத்துவதுடன் வன வளங்களைச் சாா்ந்திருப்பதை குறைத்து, அவா்களுக்கு மாற்று வருமான வாய்ப்புகளை உருவாக்கி, சந்தையில் தேவையுள்ள கைவினைத் திறன்களைக் கற்றுக்கொடுப்பது இப்பயிற்சியின் நோக்கம் என ஆசனூா் புலிகள் காப்பகத்தின் கள இணை இயக்குநா் யோகேஷ்குமாா் காா்க் தெரிவித்தாா்.