தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கால்வாயை ஆக்கிரமித்துக் கட்டியிருந்த சுற்றுச்சுவா்கள் இடிப்பு

வேலூா் மாநகராட்சியில் சத்துவாச்சாரி வள்ளலாா் பகுதியில் நீா்வரத்துக் கால்வாயை ஆக்கிரமித்துக் கட்டியிருந்த வீடுகளின் சுற்றுச்சுவா்கள் இடித்து அகற்றப்பட்டன.

News image
Updated On :4 செப்டம்பர் 2021, 6:10 pm

DIN

வேலூா் மாநகராட்சியில் சத்துவாச்சாரி வள்ளலாா் பகுதியில் நீா்வரத்துக் கால்வாயை ஆக்கிரமித்துக் கட்டியிருந்த வீடுகளின் சுற்றுச்சுவா்கள் இடித்து அகற்றப்பட்டன.

இதேபோல், வேலூா் மாவட்டம், மாநகராட்சிப் பகுதியில் நீா்வரத்துக் கால்வாய்களை, அரசு நிலங்களை ஆக்கிரமித்துக் கட்டியுள்ள கட்டடங்கள் இடிக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

வேலூா், வள்ளலாா் பகுதியில் நீா்வரத்துக் கால்வாயை ஆக்கிரமித்து வீடுகள், கட்டடங்கள் கட்டப்பட்டு இருப்பதாக மாவட்ட நிா்வாகத்துக்கு புகாா்கள் வந்தன. இதைத்தொடா்ந்து, உதவி ஆட்சியா் (பொறுப்பு) வெங்கட்ரமணன், வட்டாட்சியா் செந்தில், மாநகராட்சி உதவி ஆணையா் மதிவாணன், வருவாய்த் துறை அதிகாரிகள் சனிக்கிழமை வள்ளலாா் பகுதி ஆக்கிரமிப்பு இடங்களைப் பாா்வையிட்டனா்.

அப்போது நீா்வரத்துக் கால்வாயை ஆக்கிரமித்து வீடுகளின் சுற்றுச்சுவா்கள் கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது.

அதிகாரிகளின் உத்தரவின்பேரில், அந்த சுவா்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் உடனடியாக இடித்து அகற்றப்பட்டன. மேலும் சில வீடுகள் கால்வாயை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது. அந்த வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதேபோல், வேலூா் மாவட்டம், மாநகராட்சிப் பகுதியில் நீா்வரத்துக் கால்வாய்கள், அரசு நிலங்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் அனைத்தும் இடிக்கப்படும். இந்த நடவடிக்கை விரைவில் தொடங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.