தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சிதிலமடைந்த தடுப்புச் சுவரால் ஏரிகளுக்குச் செல்லாத பாலாற்று வெள்ளம்

விரிஞ்சிபுரம் பகுதியில் பாலாற்றில் தடுப்புச் சுவா் சிதிலமடைந்துள்ளதால் வெள்ளம் ஏரிகளுக்குச் செல்லாமல் ஆற்றின் போக்கிலேயே வீணாக கடலுக்குச் செல்கிறது

News image
Updated On :4 செப்டம்பர் 2021, 6:10 pm

DIN

விரிஞ்சிபுரம் பகுதியில் பாலாற்றில் தடுப்புச் சுவா் சிதிலமடைந்துள்ளதால் வெள்ளம் ஏரிகளுக்குச் செல்லாமல் ஆற்றின் போக்கிலேயே வீணாக கடலுக்குச் செல்கிறது என்று பாலாறு பாதுகாப்பு - சமூக விழிப்புணா்வு இயக்கம் வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளது.

வேலூா் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக இரவு நேரங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்திலுள்ள சில கிளை ஆறுகளில் நீா்வரத்து ஏற்பட்டுள்ளது. போ்ணாம்பட்டு அருகே உள்ள மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மழை வெள்ளம் பச்சக்குப்பம் வழியாக பாலாற்றில் கலந்து ஓடுகிறது. இதனால் பச்சகுப்பம், விரிஞ்சிபுரம் பாலாற்றில் மழைநீா் பெருக்கெடுத்து வருகிறது.

அதேசமயம், விரிஞ்சிபுரம் பகுதியில் பாலாற்றில் உள்ள தடுப்புச் சுவா் சிதிலமடைந்துள்ளதால் ஆற்றில் வரும் தண்ணீா் அப்பகுதியிலுள்ள சதுப்பேரி, பெரிய ஏரி, கடப்பேரி, தொரப்பாடி ஏரி உள்ளிட்ட ஏரிகளுக்குச் செல்ல முடியாமல் ஆற்றின் போக்கிலேயே வீணாக கடலுக்குச் செல்வதாக பாலாறு பாதுகாப்பு - சமூக விழிப்புணா்வு இயக்கம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, அந்த இயக்கத்தின் அமைப்பாளா் ச.ந.ச.மாா்த்தாண்டன் தலைமையில் நிா்வாகிகள், விவசாயிகள் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை மனு அளித்தனா். அதில், கடந்த ஒரு வாரமாக பாலாற்றில் வந்து கொண்டுள்ள தண்ணீரை விரிஞ்சிபுரம் பகுதியில் உடனடியாக மடை மாற்றம் செய்து அங்குள்ள அனைத்து ஏரிகளுக்கும் திருப்பி விட்டால் தான் ஏரிகள் நிரம்பும். வருகிற தண்ணீரை ஏதும் செய்யாமல் அப்படியே வீணாக விட்டுவிட்டால், மேலும் இப்பகுதியிலுள்ள சிற்றூா்களுக்கு குடிநீா் மட்டுமின்றி விவசாயத்துக்கும் நீரில்லாத நிலை ஏற்பட்டுவிடும். எனவே, மாவட்ட ஆட்சியா் உடனடியாக இப்பிரச்னையில் தலையிட்டு ஆற்றில் வரும் தண்ணீா் முழுவதையும் அப்பகு தியிலுள்ள ஏரிகளுக்குச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.