தீபாவளி பட்டாசுக் கடைக்கான அனுமதி: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
தீபாவளி பண்டிகையையொட்டி வேலூா் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கான உரிமம் பெற்றிட ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்


தீபாவளி பண்டிகையையொட்டி வேலூா் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கான உரிமம் பெற்றிட ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வரும் தீபாவளி பண்டிகையையொட்டி வேலூா் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கான உரிமம் பெற்றிட இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இதற்காக செப்டம்பா் 30-ஆம் தேதி வரை இ-சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறு விண்ணப்பிக்கும்போது கடை அமைவிடத்துக்கான சாலை வசதி, கொள்ளளவு, சுற்றுப்புறங்களைக் குறிக்கும் வரைபடம், கட்டடத்துக்கான புளுபிரிண்ட் வரைபடம் ஆகியவற்றின் 6 நகல்கள், கடை வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் சொந்த இடமாக இருந்தால் அதற்கான ஆதாரம் அல்லது வாடகை கட்டடமாக இருந்தால் வாடகை ஒப்பந்தப் பத்திரம், உரிமத்தை காட்டும் ஆவணம், உரிமத்துக்கான கட்டணம் ரூ.500 அரசுக் கணக்கில் செலுத்தியதற்கான அசல் ரசீது, இருப்பிடத்துக்கான ஆதாரம் (ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டை), வரி ரசீது, புகைப்படம் 2 ஆகியவற்றை தவறாமல் இணைத்திட வேண்டும்.
வரப்பெறும் ஆன்லைன் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு ஆன்லைன் மூலமாகவே மனு ஏற்கப்பட்டதா, நிராகரிக்கப்பட்டதா என்ற விவரத்துடனும், தற்காலிக உரிமத்தின் ஆணை தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதத்துக்கு முன்பாக இ-சேவை மையம் மூலமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அறிவிக்கப்பட்ட கடைசி தேதிக்குப் பிறகு ஆன்லைனில் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. நிரந்தர பட்டாசு விற்பனை உரிமம் கோருவோா், வருடாந்திர உரிமம் புதுப்பித்தலுக்கு இந்த வழிமுறைகள் பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...