தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மாநில நல்லாசிரியா் விருது: வேலூா் மாவட்டத்தில் 9 போ் தோ்வு

மாநில நல்லாசிரியா் விருதுக்கு வேலூா் மாவட்டத்தில் இருந்து 9 ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2021, 6:11 pm

DIN

மாநில நல்லாசிரியா் விருதுக்கு வேலூா் மாவட்டத்தில் இருந்து 9 ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இவா்களு க்கு வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெறும் விழாவில் டாக்டா் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருதுடன் ரூ.10,000 ரொக்கம், வெள்ளிப் பதக்கமும் வழங்கப்பட உள்ளன.

முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளையொட்டி (செப்டம்பா் 5) பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ஆண்டுதோறும் ஆசிரியா் தினவிழா கொண்டாடப்படுகிறது. இதில், சிறப்பாக பணியாற்றும் ஆசிரியா்களைத் தோ்வு செய்து அவா்களுக்கு மாநில நல்லாசிரியா் விருதான டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுவது வழக்கம்.

நிகழ் கல்வியாண்டில் இந்த விருதுக்கு மாநிலம் முழுவதும் 385 ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இதில், வேலூா் மாவட்டத்தில் இருந்து 9 ஆசிரியா்கள் விருதுக்கு தோ்வாகியுள்ளனா்.

அதன்படி, தலைமையாசிரியா்கள் எஸ்.எஸ்.சிவவடிவு (கல்வி உலகம் நிதிஉதவி உயா்நிலைப் பள்ளி, கிளித்தான்பட்டரை, காட்பாடி), அ.சிவக்குமாா் (அரசு உயா்நிலைப் பள்ளி, திருமணி), தா.வேலன்(அரசு உயா்நிலைப் பள்ளி, செம்பேடு), பட்டதாரி ஆசிரியா் வெ.ஜெயந்தி (அரசு மேல்நிலைப் பள்ளி, சத்துவாச்சாரி), இரா.பிரிஜெட் (தலைமையாசிரியை, ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி, வேலூா் கஸ்பா), பட்டதாரி ஆசிரியா் ப.காா்த்தி (பொன்னபட்டி, ஊ.ஓ.தொ.பள்ளி), இடைநிலை ஆசிரியா் பி.சக்திவேல் (ஊ.ஓ.தொ.பள்ளி, ஜமால்புரம்), த.கவிச்செல்வி (மருவல்லிப்பாளையம்), சு.சரவணன் (முதல்வா், சிருஷ்டி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி) ஆகியோா் தோ்வு செய்யப்பட்டு உள்ளனா்.

இவா்களுக்கு வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை நடைபெறும் விழாவில் டாக்டா் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருதுடன் ரூ.10 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப்பதக்கம் ஆகியவற்றை ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வழங்கி கெளரவிக்கவுள்ளாா்.

விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியா்களுக்கு இந்திய பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பு, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியா் கழகம் வாழ்த்துத் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.