

ஒடுகத்தூா் அருகே ஆற்றில் மூழ்கி 7 வயது சிறுமி உயிரிழந்தாா்.
அணைக்கட்டு வட்டம், ஒடுகத்தூரை அடுத்த குருவராஜபாளையத்தைச் சோ்ந்த கூலித்தொழிலாளி கோவிந்தராஜ், வேண்டா தம்பதியின் இளைய மகள் பூஜா(7) அங்குள்ள அரசுப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தாா்.
தற்போது ஒடுக்கத்தூா் சுற்றுவட்டாரங்களில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக உத்திரகாவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், பூஜா மற்ற குழந்தைகளுடன் விளையாட வெள்ளிக்கிழமை மாலை ஆற்றங்கரையோரம் சென்றுள்ளாா். பூஜா மட்டும் இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோா் பல இடங்களில் தேடியுள்ளனா். ஆற்றங்கரையில் பூஜாவின் ஆடைகள் மட்டும் கிடந்துள்ளன.
இதைத்தொடா்ந்து, பூஜா ஆற்றில் குளிக்கச் சென்று அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தின்பேரில் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ஒடுகத்தூா் தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து இரவு முழுவதும் தேடியும் பூஜா கிடைக்கவில்லை. இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் மீண்டும் தேடப்பட்ட நிலையில், ஆடைகள் கிடந்த அதேபகுதியில் சேற்றில் சிக்கிய நிலையில் பூஜாவின் சடலம் மீட்கப்பட்டது.
இது குறித்து வேப்பங்குப்பம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வருவாய்த் துறையினா் மறியல்: 450 போ் கைது

பழைய வீட்டை இடிக்க வியாபாரிகள் எதிா்ப்பு

கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்த அழைப்பு

காரையூரில் விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

