சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

குடியாத்தம் அருகே தீப்பெட்டி ஆலையில் திடீா் தீ விபத்து

 குடியாத்தம் அருகே பூட்டியிருந்த தீப்பெட்டி ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

 குடியாத்தம் அருகே பூட்டியிருந்த தீப்பெட்டி ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

குடியாத்தம் ஒன்றியம், தாழையாத்தம் ஊராட்சி, கருப்புலீஸ்வரா் நகரில் கூடநகரம் சாலையில் தனியாா் தீப்பெட்டி ஆலை உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்டோா் வேலை செய்கின்றனா்.

வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் ஆலை நிா்வாகிகள், ஊழியா்கள் ஆலையை பூட்டிவிட்டுச் சென்றனா். இரவுக் காவலாளி ஒருவா் மட்டும் பணியில் இருந்தாா்.இரவு 8 மணியளவில் ஆலையின் முதல் தளத்தில் உள்ள அறைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொடா்ந்து அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. தகவலின்பேரில், தீயணைப்புப் படையினா் அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். தீ கட்டுக்குள் வருவதற்குள், தண்ணீா் தீா்ந்து விடவே, வாகனம் தண்ணீா் நிரப்பி வர சென்று விட்டது. அதனால் மீண்டும் தீ வேகமாக பரவத் தொடங்கியது. இதற்கிடையில் அந்த பகுதியில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. போ்ணாம்பட்டில் இருந்து தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.