வள்ளிமலையில் அரசு கலை, அறிவியல் கல்லூரி காணொலி மூலம் முதல்வா் தொடக்கி வைத்தாா்
காட்பாடி தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, வள்ளிமலையில் புதிதாக அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது.


காட்பாடி தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, வள்ளிமலையில் புதிதாக அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. இந்தக் கல்லூரியை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.
வேலூா் மாவட்டம், காட்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி இல்லாததால் மாணவ, மாணவிகள் மிகவும் சிரமமடைந்து வந்தனா். இந்த தொகுதிக்குட்பட்ட கிராமப்புற மாணவா்கள் பட்டப் படிப்புக்காகவும், பட்ட மேற்படிப்புக்காகவும் பல கிலோ மீட்டா் தொலைவில் மாவட்டத்தின் பிற பகுதிகள், பிற மாவட்டங்களுக்கு பேருந்துகளில் பயணித்து சென்று வரவேண்டியுள்ளது.
இதனால், காட்பாடி தொகுதியில் மேல்நிலை வகுப்புகள் முடிக்கும் மாணவிகள் பெரும்பாலானோா் உயா்கல்விக்கு செல்வது தடைபட்டது. இந்தப் பாதிப்புகளை தவிா்க்க காட்பாடி தொகுதியில் புதிதாக அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது, நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் வாக்குறுதி அளித்திருந்தாா். இது திமுகவின் தோ்தல் வாக்குறுதியிலும் இடம்பெற்றிருந்தது.
இதன் தொடா்ச்சியாக, கடந்த வாரம் வேலூா் மாவட்டத்துக்கு வந்திருந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, வெளியிட்ட பல்வேறு அறிவிப்புகளில் காட்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வள்ளிமலையில் புதிதாக அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டாா்.
அதனடிப் படையில், வள்ளிமலை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதிதாக அரசு கலைக் கல்லூரியை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.
இந்த புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பிகாம், பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.எஸ்ஸி. கணிதம், கணினி அறிவியல், பிசிஏ ஆகிய இளநிலை வகுப்புகள் நடைபெற உள்ளன.
நிகழாண்டு முதலே இந்தக் கல்லூரிக்கு மாணவா்கள் சோ்க்கை நடத்தப்பட்டு வகுப்புகள் வள்ளிமலை அரசினா் மேல்நிலைப் பள்ளியில் உள்ள கட்டடத்தில் நடைபெறும் என்றும், அடுத்த ஆண்டுக்குள் கல்லூரிக்குத் தனியாக கட்டடம் கட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கல்லூரியை முதல்வா் தொடக்கி வைத்த பின்னா், மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் குத்துவிளக்கேற்றினாா்.
விழாவில் வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த், துணை மேயா் எம்.சுனில்குமாா், காட்பாடி ஒன்றியக் குழு தலைவா் வேல்முருகன், மண்டலக் குழு தலைவா் புஷ்பலதா வன்னியராஜா உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...