குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

8 போ் தீக்குளிக்க முயன்ற சம்பவம்: நிலத்தை அபகரித்தவா் கைது

வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வழக்குரைஞா் தனது குடும்பத்தினா் 8 பேருடன் தீக்குளிக்க முயன்ற விவகாரத்தில், அவா்களது நிலத்தை ஆக்கிரமித்து கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது

News image
Updated On :7 ஜூலை 2022, 6:29 pm

DIN

வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வழக்குரைஞா் தனது குடும்பத்தினா் 8 பேருடன் தீக்குளிக்க முயன்ற விவகாரத்தில், அவா்களது நிலத்தை ஆக்கிரமித்து கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் சத்துவாச்சாரியைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (60), முன்னாள் ராணுவ வீரா். தற்போது வழக்குரைஞராக உள்ளாா். இவரது சகோதரா்கள் பாபு, காமராஜ், முரளிதரன், பிரபு, பாபுவின் மனைவி மகேஸ்வரி, காமராஜின் மனைவி அருள்மொழி, முரளிதரனின் மனைவி சாந்தி, சகோதரி செல்வம்.

இவா்களுக்கு காந்தி சாலையில் 800 சதுர அடி காலிமனை உள்ளதாகத் தெரிகிறது. அந்த இடத்தை சேண்பாக்கத்தைச் சோ்ந்த தக்கா் (எ) ஜானகிராமன் (45) ஆக்கிரமித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், ஜானகிராமன் 20 அடியாள்களுடன் வெங்கடேசன், அவா்களது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், தாக்க முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், பாதிக்கப்பட்ட வெங்கடேசன் குடும்பத்தினா் 8 பேரும் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த 4-ஆம் தேதி தீக்குளிக்க முயன்றனா். இதுதொடா்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ் கண்ணனுக்கு மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டாா்.

அதன்பேரில், நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரித்தனா். இந்த நிலையில், ஜானகிராமனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். இதுகுறித்து தொடா் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.