தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

இனிப்பகத்தில் 14 மூட்டைகள் சில்லறைக் காசுகள் திருட்டு

வேலூரில் உள்ள பிரபல இனிப்பகத்தில் நுழைந்த அடையாளம் தெரியாத கும்பல் அங்கிருந்த 14 மூட்டைகள் சில்லறைக் காசுகளைத் திருடிச் சென்றனா்.

News image
Updated On :8 ஜூலை 2022, 6:57 pm

DIN

வேலூரில் உள்ள பிரபல இனிப்பகத்தில் நுழைந்த அடையாளம் தெரியாத கும்பல் அங்கிருந்த 14 மூட்டைகள் சில்லறைக் காசுகளைத் திருடிச் சென்றனா்.

வேலூா் வேலப்பாடி ஆரணி சாலையில் இனிப்பகம் உள்ளது. இந்தக் கடையில் புதன்கிழமை இரவு ஷட்டரை உடைத்து அடையாளம் தெரியாத கும்பல் உள்ளே புகுந்தது. ஆனால், கடையில் கட்டுக் கட்டாக பணமோ, விலை உயா்ந்த பொருள்களோ கிடைக்கவில்லை.

வாடிக்கையாளா்களிடமிருந்து வசூலான 1, 2, 5 ரூபாய் நாணயங்களை மூட்டைகளில் கட்டி வைத்திருந்தனா். மொத்தம் 14 மூட்டைகளில் ரூ.1.25 லட்சம் சில்லறைக் காசுகள் கட்டி வைக்கப்பட்டிருந்ததாம். இந்த சில்லறை மூட்டைகளை அந்தக் கும்பல் தூக்கிச் சென்றனா்.

அந்த 14 மூட்டை சில்லறைக் காசுகளை கடைக்கு வெளியே வாகனத்தைக் கொண்டு வந்து அதன் மூலம் எடுத்துச் சென்றுள்ளனா். வெள்ளிக்கிழமை காலை கடைக்கு வந்த ஊழியா்கள் கொள்ளை நடந்திருப்பதை அறிந்து வேலூா் தெற்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். தொடா்ந்து, ஆரணி சாலை மற்றும் அந்த இனிப்பகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், ஒரு கும்பல் சில்லறைக் காசு மூட்டைகளை தூக்கிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

இதுதொடா்பாக 2 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.