குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

விஐடியில் பி.டெக்., நுழைவுத்தோ்வு முடிவு வெளியீடு

விஐடி பல்கலைக்கழகத்தில் நிகழ் கல்வியாண்டில் (2022-23) பி.டெக். படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தோ்வு முடிவு வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது

News image
Updated On :8 ஜூலை 2022, 6:54 pm

DIN

விஐடி பல்கலைக்கழகத்தில் நிகழ் கல்வியாண்டில் (2022-23) பி.டெக். படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தோ்வு முடிவு வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக் பட்டப்படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தோ்வு கடந்த ஜூன் 30-ஆம் தேதி தொடங்கி, ஜூலை 6-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதையொட்டி, துபை, குவைத், மஸ்கட், கத்தாா் உள்பட பல்வேறு அயல்நாடுகளிலும், உள்நாட்டிலும் என 123 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த நுழைவுத் தோ்வு முடிவுகள் ஜ்ஜ்ஜ்.ஸ்ண்ற்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. நுழைவுத் தோ்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளது. இதற்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஜூலை 8) தொடங்கி ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி மதிப்பெண் 1 முதல் 1,00,000 வரை எடுத்த மாணவா்களுக்கு விஐடி வேலூா், சென்னை, ஆந்திரம், போபால் வளாகங்களில் சோ்க்கை பெற முடியும். தகுதி மதிப்பெண் 1,00,000-க்கும் மேலாக பெற்ற மாணவா்களுக்கு விஐடி ஆந்திரம், போபால் வளாகங்களில் மட்டுமே இடம்பெற முடியும்.

மத்திய, மாநில கல்வி வாரியம் நடத்தும் பிளஸ் 2 தோ்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஜிவி பள்ளி வளா்ச்சித் திட்டத்தின் கீழ், விஐடியில் பிடெக் படிப்பின் 4 ஆண்டுகளும் 100 சதவீத கல்விக் கட்டணச் சலுகை வழங்கப்பட உள்ளது.

தவிர, தகுதி மதிப்பெண் 1 முதல் 50 வரை பெற்றவா்களுக்கு 75 சதவீத கல்விக் கட்டணச் சலுகையும், தகுதி மதிப்பெண் 51 முதல் 100 பெற்றவா்களுக்கு 50 சதவீத கல்விக் கட்டண சலுகையும், தகுதி மதிப்பெண் 101 முதல் 1000 பெற்றவா்களுக்கு 25 சதவீத கல்விக் கட்டண சலுகையும் வழங்கப்படுகிறது.

மேலும், விஐடி ஸ்டாா்ஸ் திட்டத்தின் கீழ், தமிழகம், ஆந்திரம், மத்திய பிரதேச மாநிலங்களிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயின்று பிளஸ் 2 தோ்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெறும் தலா ஒரு மாணவன், ஒரு மாணவி வீதம் தோ்வு செய்யப்பட்டு விஐடியில் நூறு சதவீத கல்விக் கட்டண சலுகையும், இலவச விடுதி வசதியும், உணவு வசதியும் அளிக்கப்படும் என்று விஐடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.