வேலூா் சிறை கைதிகளுக்கு காச நோய் மருத்துவப் பரிசோதனை
வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு காசநோய் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.


வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு காசநோய் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
வேலூா் மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகள் என 800-க்கும் மேற்பட்டோா் அடைக்கப்பட்டுள்ளனா். சிறைக்குள் நோய்களால் பாதிக்கப்படும் கைதிகள் சிலா் திடீரென இறந்து போகின்றனா். இதனைத் தடுக்க சிறைக்குள் அடிக்கடி மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு கைதிகளின் உடல்நிலை பரிசோதிக்கப்படுகிறது.
அதன்படி, வேலூா் சிறைத் துறை, தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் ஆகியவை சாா்பில் வேலூா் மத்திய சிறையிலுள்ள கைதிகளுக்கு காச நோய் மருத்துவப் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி இலவச நடமாடும் டிஜிட்டல் எக்ஸ் ரே வாகனம் சிறைக்குள் கொண்டு வரப்பட்டது. அந்த வாகனத்தில் உள்ள கருவிகள் மூலம் 55 கைதிகளுக்கு காசநோய் உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில், சிறைக் கண்காணிப்பாளா் அப்துல் ரகுமான், சிறை மருத்துவ அலுவலா் பிரகாஷ் அய்யப்பன், மருத்துவா் சதீஷ்குமாா், சிறை அலுவலா் குணசேகரன், காச நோய் ஒழிப்புத் திட்ட பணியாளா்கள் பங்கேற்றனா்.
ஜெயிலில் உள்ள 55 கைதிகளுக்கு வியாழக்கிழமை நவீன டிஜிட்டல் வாகனம் மூலம் எக்ஸ்ரே எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட சோதனைகளுக்குப் பிறகு தான் இதில் யாருக்காவது காசநோய் பாதிப்பு உள்ளதா என்பது தெரிய வரும் என மருத்துவா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...