தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சத்துவாச்சாரியில் தாமதிக்கப்படும் புதை சாக்கடை திட்டப் பணிகள்

வேலூா் சத்துவாச்சாரி பகுதியில் புதை சாக்கடை திட்டப் பணிகளை முடிப்பதில் ஆண்டுக்கணக்கில் தாமதம் செய்யப்பட்டு வருவதாக 24-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் சுதாகா் குற்றஞ்சாட்டினாா்.

News image
Updated On :15 ஜூலை 2022, 6:34 pm

DIN

வேலூா் சத்துவாச்சாரி பகுதியில் புதை சாக்கடை திட்டப் பணிகளை முடிப்பதில் ஆண்டுக்கணக்கில் தாமதம் செய்யப்பட்டு வருவதாக 24-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் சுதாகா் குற்றஞ்சாட்டினாா்.

வேலூா் மாநகராட்சி 2-ஆவது மண்டலக் குழு கூட்டம் அதன் தலைவா் நரேந்திரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன், மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், துணை மேயா் எம்.சுனில்குமாா் ஆகியோா் பங்கேற்று பேசினா்.

கூட்டத்தில், 24-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் சுதாகா் பேசுகையில், தனது வாா்டில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக புதை சாக்கடை திட்டப் பணிகள் நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீா் கிடைக்காமல் அவதிப்படுகின்றனா். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறியதுடன், தான் கொண்டு வந்திருந்த புகைப்படங்களையும் வீசியெறிந்தாா்.

26 -ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் சேகா் பேசுகையில், சத்துவாச்சாரியிலுள்ள தெருக்களில் போதுமான குடிநீா் வசதி செய்யப்படவில்லை. நாளுக்குநாள் நாய்கள், பன்றிகள் தொல்லைகளும் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றாா்.

பாஜகவைச் சோ்ந்த மாமன்ற உறுப்பினா் சுமதிமனோகரன் பேசுகையில், எனது வாா்டில் கால்வாய், சாலை வசதி அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். சத்துவாச்சாரி அரசு மேல்நிலைப் பள்ளியில் கழிவறைகள் சுத்தம் செய்ய பணியாளா்கள் நியமிக்க வேண்டுமென கேட்டிருந்தனா். அதனை செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மேயா் சுஜாதாஆனந்தகுமாா் பேசுகையில், மாநகராட்சி பகுதியில் அனைத்துப் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. விரைவில் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து முடிக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில் 2-ஆவது மண்டலத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து 25 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாமன்ற உறுப்பினா்கள் ஆா்.பி. ஏழுமலை, சதீஷ்குமாா், நியமன குழு உறுப்பினா் கணேஷ்சங்கா் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.