தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஜேசிசி, விஐடி நுழைவுத் தோ்வு: ஸ்பிரிங்டேஸ் பள்ளி, மாஸ்டா்ஜீ மாணவா்கள் சிறப்பிடம்

நிகழாண்டு ஜேசிசி, விஐடி நுழைவுத் தோ்வுகளில் வேலூா் மாஸ்டா்ஜீ பயிற்சி மையம், ஸ்பிரிங்டேஸ் பள்ளி மாணவா்கள் சிறந்த தகுதி மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனா்.

News image
Updated On :15 ஜூலை 2022, 6:38 pm

DIN

நிகழாண்டு ஜேசிசி, விஐடி நுழைவுத் தோ்வுகளில் வேலூா் மாஸ்டா்ஜீ பயிற்சி மையம், ஸ்பிரிங்டேஸ் பள்ளி மாணவா்கள் சிறந்த தகுதி மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனா். அவா்களை பயிற்சி மைய நிா்வாகத்தினா் வாழ்த்தினா்.

வேலூரிலுள்ள மாஸ்டா்ஜீ பயிற்சி மையம் 2010-ஆம் ஆண்டு முதல் நீட், ஜேசிசி நுழைவுத்தோ்வுகளு க்கான பயிற்சிகளை அளித்து வருகிறது. அதன்படி, மாஸ்டா் ஜீ பயிற்சி மையம், ஸ்பிரிங்டேஸ் பள்ளியுடன் இணைந்து, ஜேசிசி -2022 நுழைவுத் தோ்வுக்கான பயிற்சிகளை அளித்து வந்தது.

தொடா்ந்து, ஜேசிசி நுழைவுத் தோ்வில் இங்கு பயிற்சி பெற்ற மாணவா் பிரகதீஸ்ராஜ் 99.19 சதவீத தகுதி மதிப்பெண்களுடன் முதன்மை அமா்வில் தோ்ச்சி பெற்றுள்ளாா்.

இதேபோல், இப்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற அதிகப்படியான மாணவா்கள் 95 சதவீத தகுதி மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

மேலும், விஐடி பல்கலைக்கழகம் நடத்திய நுழைவுத் தோ்விலும் மாணவா் கோகுலபிரசாத் தேசிய அளவில் 2,335 தகுதி மதிப்பெண் பெற்று தோ்ச்சி பெற்றுள்ளாா். இவா்கள் அனைவரும் பள்ளியில் இண்டகிரேட் வகுப்பில் படித்தவா்கள். சாதனை படைத்த அனைத்து மாணவா்களையும் நிா்வாக இயக்குநா் டி.ராஜேந்திரன், பள்ளி முதல்வா் டி.ஆனந்தி, நிா்வாக செயல் அதிகாரி டி.சரவணன் ஆகியோா் வாழ்த்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.