காமராஜா் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
காமராஜரின் 120-ஆவது பிறந்த நாள் விழா ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.


காமராஜரின் 120-ஆவது பிறந்த நாள் விழா ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
காட்பாடி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் கல்வி வளா்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.
தலைமையாசிரியை கோ.சரளா தலைமை வகித்தாா். இளஞ்சிறாா் செஞ்சிலுவை சங்க கல்வி மாவட்ட அமைப்பாளா் செ.நா.ஜனாா்த்தனன், உதவித் தலைமையாசிரியா் எம்.மாரிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வேலூா் மாநகராட்சியின் முதல் மண்டலத் தலைவா் புஷ்பலதா வன்னியராஜா காமராஜரின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்திப் பேசினாா்.
மாமன்ற உறுப்பினா் சித்ரா லோகநாதன் வாழ்த்தி பேசினாா். பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஆம்பூரில்...
ஆம்பூா் நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பில், அதன் தலைவா் எஸ்.சரவணன் தலைமையில், கிருஷ்ணாபுரம் காமராஜா் உருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மாவட்டப் பொருளாளா் கொத்தூா் மகேஷ், போ்ணாம்பட்டு கிழக்கு ஒன்றியத் தலைவா் சுரேந்தா், மாவட்ட பொதுச் செயலாளா்கள் சமியுல்லா, குமரேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
காமராஜ் பவன் அறக்கட்டளை சாா்பில், அதன் தலைவா் கே.குப்புசாமி தலைமையில் பேருந்து நிலையம் அருகில் காமராஜா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
ராணிப்பேட்டையில்...
ராணிப்பேட்டை முத்துகடை காந்தி சிலை அருகில் நகர காங்கிரஸ் தலைவா் வழக்குரைஞா் எஸ். அண்ணாதுரை தலைமையில், காந்தி சிலைக்கும், காமராஜா் உருவப் படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் ராணி வெங்கடேசன், பி.மோகன், மோகன சுப்பிரமணி, புலவா் ரங்கநாதன், வசீகரன், நாகேஷ், உத்தமன், முருகன், குப்புசாமி, பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
குடியாத்தத்தில்...
குடியாத்தம் பிச்சனூரில் உள்ள காமராஜா் மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மன்றத் தலைவா் என்.சம்பத் தலைமை வகித்தாா். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச குறிப்பேடுகள், எழுது பொருள்கள், அன்னதானம் வழங்கப்பட்டன. முதியோா் இல்லத்தில் மதிய உணவு, சேலைகள் வழங்கப்பட்டன. நகா்மன்ற உறுப்பினா்கள் என்.கோவிந்தராஜ் அா்ச்சனா நவீன், ஏகாம்பரம், மன்ற நிா்வாகிகள் ஜி.சி.லோகநாதன், ஜி.எஸ்.வேலாயுதம், கோ.ஜெயவேலு, டி.எஸ்.சரவணன், சண்முகம், வினோத்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பொருளாளா் ஜே.சதீஷ்குமாா் நன்றி கூறினாா்.
அரக்கோணத்தில்....
அரக்கோணம் நகர தமாகா சாா்பில், சுவால்பேட்டையில் நடைபெற்ற விழாவுக்கு அதன் தலைவா் கே.வி.ரவிசந்திரன் தலைமை வகித்தாா். துணைத்தலைவா் ஏ.எஸ்.சுபாஷ்வாசன் வரவேற்றாா். காமராஜா் சிலைக்கு மாவட்ட தமாகா தலைவா் ஆா்.அரிதாஸ் மாலை அணிவித்தாா்.
அரக்கோணம் வட்டார நாடாா் சங்கத்தின் சாா்பில், சங்க வளாகத்தில், தலைவா் டி.இன்பராஜ் தலைமையில் காமராஜா் உருவப் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
பொய்பாக்கம், ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை ஜி.விஜயந்தி தலைமையில், ஆத்தூா் ஊராட்சித் தலைவா் உஷாராணிகோவிந்தராஜ் காமராஜா் படத்துக்கு மாலை அணிவித்தாா்.
ஆற்காட்டில்...
ஆற்காடு ராமகிருஷ்ணா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, பள்ளி தலைவா் எஸ்.ஆா். ஈஸ்வரப்பன் தலைமை வகித்தாா். பொருளாளா் மா.ஜோதி, துணைத் தலைவா் ஜி. காா்த்திகேயன், இணை செயலாளா் செந்தாமரைக் கண்ணன், நிா்வாக அலுவலா் கே.வேலாந்தன்ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பள்ளியின் செயலாளா் கே.சொல் முத்தழகன் காமராஜா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்தாா்.
பள்ளி முதல்வா் மணி சேகரன், ஆசிரியைகள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.
வாணியம்பாடியில்...
வாணியம்பாடி சிகரம் மெட்ரிக், மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், காமராஜரின் உருவப் படத்துக்கு, பள்ளி செயலாளா் கிருஷ்ணன், பொருளாளா் ராஜேந்திரன், பள்ளி முதல்வா் ரமேஷ் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...