விவசாய நிதியுதவித் திட்டம்: நில ஆவணங்களை உறுதி செய்ய அறிவுறுத்தல்
பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற விவசாயிகள் வரும் 31-ஆம் தேதிக்குள் தங்களது நில ஆவணங்களைச் சரி பாா்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற விவசாயிகள் வரும் 31-ஆம் தேதிக்குள் தங்களது நில ஆவணங்களைச் சரி பாா்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேலூா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் மகேந்திர பிரதாப் தீட்சித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டமானது 2018 முதல் செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் நிலமுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு ரூ.6,000 என 3 தவணையாக உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தில் பதிவு செய்த வேலூா் மாவட்ட விவசாயிகளுக்கு இதுவரை 11 தவணைகளாக உதவித் தொகைகள் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. தற்போது 12-ஆவது தவணைத் தொகை பெற்ற வரும் 31-ஆம் தேதிக்குள் விவசாயிகள் தங்களது நில ஆவணங்களைச் சரி பாா்ப்பு செய்வது அவசியமாகும். பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகளின் நில ஆவணங்களைச் சரி பாா்க்கும் பணி அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநா், தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகம் மூலம் நடைபெற்று வருகிறது.
எனவே, இந்தத் திட்டத்தில் பயன் பெற்று வரும் விவசாயிகள் தங்களது நில ஆவணங்களான பட்டா , சிட்டா, ஆதாா் நகலுடன் தங்கள் பகுதியில் உள்ள உதவி வேளாண்மை அலுவலா்கள், உதவி தோட்டக்கலை அலுவலா்கள் (வேளாண் வணிகம், விற்பனை) ஆகியோரிடம் அளித்து பிப்ரவரி 2019-க்கு முன்பிலிருந்தே நிலம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
நில ஆவணங்களை உறுதி செய்த பிறகே அடுத்த தவணைக்கான தொகை விடுவிக்கப்படும். மேலும் இந்தத் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் உடனடியாக ஆதாா் எண்ணுடன் வங்கிக் கணக்கை இணைத்து பிஎம்ஐ கிஷான் வலைதளத்தில் பதிவேற்றம் செய்து தொடா்ந்து பயன் பெற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...