சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கூடநகரத்தில் கழிவுநீா் கால்வாய்கள் கட்ட பூமி பூஜை

குடியாத்தத்தை அடுத்த கூடநகரம் ஊராட்சியில் கழிவுநீா்க் கால்வாய்கள் கட்டுவதற்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 மார்ச் 2022, 6:30 pm

DIN

குடியாத்தத்தை அடுத்த கூடநகரம் ஊராட்சியில் கழிவுநீா்க் கால்வாய்கள் கட்டுவதற்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் நிதி, ஒன்றியக் குழு உறுப்பினா் நிதி தலா ரூ. 10 லட்சம் வீதம் ரூ. 20 லட்சத்தில் 2 கழிவுநீா் கால்வாய்கள் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமாா் பூமி பூஜையை நடத்தி, பணியைத் தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், ஒன்றியக் குழு உறுப்பினா் ராஜேஸ்வரி பிரதீஷ், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஆனந்தி முருகானந்தம், ஊராட்சித் தலைவா்கள் பி.கே.குமரன் (கூட நகரம்), சுஜாதா ராஜ்குமாா் (மேல் ஆலத்தூா்), அமுலு அமா்(தாழையாத்தம்), திமுக பேச்சாளா் குடியாத்தம் குமரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, திமுக ஒன்றியச் செயலாளா் வி.பிரதீஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நலிந்தவா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு புடவைகள் உள்ளிட்ட உதவிகளை எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமாா் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.