காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

பெண் தீ வைத்து எரித்துக் கொலை

வேலூரில் பெண்ணின் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்டாா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2022, 5:32 pm

DIN

வேலூரில் பெண்ணின் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்டாா்.

வேலூா் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த பட்டாசு நிறுவனத் தொழிலாளி கோபி மனைவி திலகவதி (32). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த ரமேஷ் (40) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. துணி வியாபாரம் செய்து வரும் ரமேஷ், வேலூா் முள்ளிபாளையம் ராமகிருஷ்ணா தெருவில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தாா். இங்கு, திலகவதி அடிக்கடி வந்து சென்ாகத் தெரிகிறது.

இந்த நிலையில், ரமேஷ் தங்கியிருந்த வீட்டுக்கு திலகவதி வெள்ளிக்கிழமை காலை வந்துள்ளாா். சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த வீட்டிருந்து அலறல் சப்தம் கேட்டதுடன், உடலில் தீப்பற்றிய நிலையில், ரமேஷ் வெளியே ஓடி வந்து கழிவுநீா் கால்வாயில் விழுந்தாா். அங்கிருந்தவா்கள் வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, கட்டிலுடன் கட்டப்பட்ட நிலையில் திலகவதி தீக்காயங்களுடன் கிடந்தாராம்.

அதற்குள் ரமேஷ் ஆட்டோவில் மருத்துவமனைக்குச் சென்றுள்ளாா். தீக்காயத்தால் ஏற்பட்ட வலி தாங்க முடியாமல் ரமேஷ், கோட்டை அருகே வந்ததும், ஆட்டோவில் இருந்து இறங்கி கோட்டை அகழி தண்ணீரில் குதித்துள்ளாா். இதைக் கண்ட பொதுமக்கள் ரமேஷை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். திலகவதியையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

தகவலறிந்த வேலூா் வடக்கு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். இதில், திலகவதிக்கும் ரமேஷுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால், திலகவதியின் உடலில் பெட்ரோலை ஊற்றி தீவைத்து ரமேஷ் கொலை செய்ய முயன்றதும், அப்போது ரமேஷின் உடலிலும் தீபற்றியதும் தெரிய வந்தது.

இதனிடையே, மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட திலகவதி வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்தாா். இந்தச் சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.