

வேலூர்: வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த நிலையில் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு பொது மக்கள் ஒத்துழைப்புடன் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அருகே வாணியம்பாடி மதனாஞ்சேரி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி தினகரன் (21) என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.
வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கபட்ட நிலையில் இன்று தினகரனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.
இதனால் அவரது இரண்டு சிறுநீரகங்கள், கல்லீரல், ஆகிய உடல் உறுப்புகள் சி,எம்.சி மருத்துவமனைக்கும், இருதயம் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது
இதனை பெற்றுக் கொண்ட மருத்துவக்குழு காவல்துறை உதவியுடன் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் உதவியுடன் உரிய நேரத்தில் கொண்டு செல்லப்படுகிறது.
இதற்காக வேலூர் , ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் சென்னை பெருநகர காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டும் , பொதுமக்களும் அங்கங்கே வாகனத்திற்கு வழிவிட்டு மனிதநேயம் மலர ஒத்துழைப்பது அனைவருக்கும் மகிழ்ச்சி அளித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.