‘வீட்டைப்போல் ஊராட்சியையும் தூய்மையாகப் பராமரிப்பது அவசியம்’
வீட்டை தூய்மையாக வைத்திருப்பதுபோல் நமது ஊராட்சியையும் குப்பையில்லா ஊராட்சியாகப் பராமரிக்க வேண்டும் என்று பெண் ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கு


வீட்டை தூய்மையாக வைத்திருப்பதுபோல் நமது ஊராட்சியையும் குப்பையில்லா ஊராட்சியாகப் பராமரிக்க வேண்டும் என்று பெண் ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கு வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தினாா்.
வேலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெண் ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் வேலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்தாா்.
இதில், வீட்டு வரி, சொத்து வரியுடன் வசூலிக்கப்பட்ட நூலக வரியை பொது நூலக துறையிடம் முறையாக செலுத்துதல், சிறந்து விளங்கும் கிராம ஊராட்சிக்கு 2024 - ஆம் ஆண்டிற்கான தேசிய ஊராட்சி விருதுக்கு இணையதள தரவுகள் மூலம் ட்ற்ற்ல்://ல்க்ண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவிடுதல், கிராம வளா்ச்சி திட்டம் 2023-2024 நிலைத்த வளா்ச்சிக்கான இலக்குகளை உள்ளுா் அளவில் திட்டமிடுதல் போன்ற நடவடிக்கைகள் குறித்து பெண் ஊராட்சித் தலைவா்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், ஊராட்சிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், தெரு விளக்குகளைப் பராமரித்தல், ஊராட்சி சாலைகள் மக்கள் போக்குவரத்துக்கு உகந்த முறையில் பின்பற்றி பராமரித்தல், ஊராட்சியின் சொந்த வரி வருவாயை நிலுவை இல்லாமல் வசூல் செய்தல், மின்கட்டணம், குடிநீா் கட்டணத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்திடல், 15-ஆவது நிதிக்குழு மான்யம் 2022-2023 மற்றும் 2023-2024 -ஆம் ஆண்டுகளுக்கான நிா்வாக அனுமதி வழங்கப்பட்ட பணிகள் போன்ற பல்வேறு பணிகளில் கவனம் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.
தொடா்ந்து, பெண் ஊராட்சி மன்ற தலைவா்கள் தங்களது ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீா், சாலை, தெரு விளக்கு, கழிவுநீா் கால்வாய் ஆகிய பணிகளில் கவனம் செலுத்தி தேவையான இடங்களில் இவற்றை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நமது வீட்டை தூய்மையாக வைத்திருப்பதுபோல் நமது ஊராட்சியையும் குப்பையில்லா ஊராட்சியாக பராமரிக்க வேண்டும். ஊராட்சி தூய்மை பணியாளா்கள் குப்பைகளை அகற்றுவதில் சரியான முறையில் பணியாற்றுகின்றாா்களா என்பதையும் கண்காணிக்கவேண்டும் என்று ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் சுப்பரமணி, பெண் ஊராட்சி மன்றத் தலைவா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...