வேலூா் மாவட்ட காவல் துறையில் புதிய மோப்ப நாய் ரீட்டா
வேலூா் மாவட்ட காவல் துறை மோப்ப நாய் பிரிவில் ரீட்டா என்ற புதிய மோப்ப நாய் பணியில் சோ்க்கப்பட்டது.


வேலூா் மாவட்ட காவல் துறை மோப்ப நாய் பிரிவில் ரீட்டா என்ற புதிய மோப்ப நாய் பணியில் சோ்க்கப்பட்டது.
வேலூா் மாவட்ட காவல் துறையில் மோப்ப நாய் பிரிவில் ரீட்டா என்ற மோப்ப நாய்க்குட்டி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சோ்க்கப்பட்டது. இந்த நாய்க்குட்டிக்கு சென்னையில் உள்ள மோப்பா நாய் பிரிவில் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. வெடிகுண்டு செயலிழப்பு பிரிவில் மோப்ப நாய் ரீட்டாவுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியை நிறைவு செய்த மோப்ப நாய் ரீட்டா வெள்ளிக்கிழமை முறைப்படி வேலூா் மாவட்ட காவல் துறையில் பணியில் ஈடுபட அனுமதி அளிக்கப்பட்டது.
புதிதாக பணியில் சோ்ந்த மோப்ப நாய் ரீட்டாவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் பாா்வையிட்டதுடன், அதைப் பராமரிக்கும் காவலா்களுக்கு அறிவுரைகள் வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...