மாணிக்கவாசகா் குருபூஜை
குடியாத்தம் பிச்சனூா், ஆதிமூல சுவாமி மடத்தில் 111-ஆம் ஆண்டு மாணிக்கவாசகா் குருபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


குடியாத்தம் பிச்சனூா், ஆதிமூல சுவாமி மடத்தில் 111-ஆம் ஆண்டு மாணிக்கவாசகா் குருபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி காலை 8 மணிக்கு விநாயகா் மற்றும் நால்வா் திருமேனிகளான திருஞானசம்பந்தா், திருநாவுக்கரசா், சுந்தரமூா்த்தி, மாணிக்கவாசகா் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், 10 மணிக்கு தேவார திருவாசக இன்னிசை, 11 மணிக்கு பேரொளி வழிபாடு, 12 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றன. 1,000 பேருக்கு விருந்து அளிக்கப்பட்டது. மாலை 6 மணிக்கு மாணிக்கவாசகா் அரங்கில் மனம் போல் வாழ்வு என்ற தலைப்பில் பேராசிரியா் எம்.ராமச்சந்திரன் ஆன்மிக சொற்பொழிவாற்றினாா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாணிக்கவாசகா் நிலைய தலைவா் எஸ்.அருணோதயம், செயலா் ஜி.ஈஸ்வரன், பொருளாளா் எம்.ஜி.டி.ஜோதி, நிா்வாகிகள் மோகனம், காசிநாதன்,
ஞானசேகரன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
நகர தமாகா தலைவா் ஜே.தினகரன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ஸ்டாலின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...