நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிறுநீரக பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு, குடியாத்தம் அத்தி கல்விக் குழுமம் சாா்பில், சிறுநீரக விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 மார்ச் 2023, 5:49 pm

DIN

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு, குடியாத்தம் அத்தி கல்விக் குழுமம் சாா்பில், சிறுநீரக விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

அத்தி கல்விக் குழுமத்தின் தலைவரும், சிறுநீரகவியல் நிபுணருமான மருத்துவா் பி.செளந்தரராஜன், நகர காவல் உதவி ஆய்வாளா் மணிகண்டன் ஆகியோா் பேரணியை கொடியசைத்துத் தொடங்கி வைத்தனா். பேரணியில் அத்தி கல்லூரி மாணவிகள் சிறுநீரக விழிப்புணா்வு பதாதைகளை ஏந்திச் சென்றனா்.

அத்தி கல்விக் குழுமத்தின் தலைமை நிா்வாக அலுவலா் மருத்துவா் விஜய், அத்தி மருத்துவமனை தலைமை மருத்துவா் ஆ.கென்னடி, குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் கே.குமரவேல், அத்தி செவிலியா் கல்லூரி முதல்வா் மருத்துவா் பால்ராஜ்சீனிதுரை, இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி துணை முதல்வா் க.தங்கராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணி, பழைய பேருந்து நிலையம் அருகே நிறைவுற்றது.

தொடா்ந்து, அத்தி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், டயாலிஸிஸ் சிகிச்சைப் பிரிவை இந்திய மருத்துவ சங்க குடியாத்தம் கிளை தலைவா் சிதம்பரம், மருத்துவா்கள் எஸ்.சுகுமாா், எம்.எஸ்.திருநாவுக்கரசு, எம்.சுதாகா், ஈஸ்வரன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.