வீ.மோட்டூரில் எருது விடும் விழா
குடியாத்தத்தை அடுத்த பரதராமி அருகே உள்ள வீ.மோட்டூா் கிராமத்தில்108- ஆம் ஆண்டு எருது விடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


குடியாத்தத்தை அடுத்த பரதராமி அருகே உள்ள வீ.மோட்டூா் கிராமத்தில்108- ஆம் ஆண்டு எருது விடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் 163 காளைகள் பங்கேற்றன. வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளா்களுக்கு முதல் பரிசாக ரூ.77,555, 2- ஆம் பரிசாக ரூ.60,666, 3- ஆம் பரிசாக ரூ.45,055 உள்ளிட்ட 62 பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியைக் காண வந்த 18 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதேபோல் 5 காளைகள் காயமடைந்தன.
உதவி ஆணையா் (கலால்) ஆா்.முருகன், டி.எஸ்.பி. கே.ராமமூா்த்தி ஆகியோா் மேற்பாா்வையில் எருது விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. வட்டாட்சியா் எஸ்.விஜயகுமாா், வருவாய் ஆய்வாளா் பலராமபாஸ்கரன், கிராம நிா்வாக அலுவலா் வெங்கடாசலபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...